FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கருவூலம்: டீசல் எஞ்ஜினை கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல்!

டீசல் எந்திரத்தைக் கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் 1858ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் பிறந்தார். இவருடைய தந்தை இரும்பு வேலை செய்யும் கொல்லர்! எனவே

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

டீசல் எந்திரத்தைக் கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் 1858ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் பிறந்தார். இவருடைய தந்தை இரும்பு வேலை செய்யும் கொல்லர்! எனவே தன்னுடைய மகள் ருடால்ஃப் டீசலையும் தன்னுடைய தொழில் துறையில் பயிற்சி அளித்தார்! டீசல் எதையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் உடையவராக விளங்கினார். ஆராய்ச்சிகள் பல செய்வதில் வல்லவராக விளங்கினார்!

"ஆஸ்பர்க்' தொழிற்பயிற்சிப் பள்ளியில் படித்த டீசல், மியூனிச் தொழில் நுட்பப் பள்ளியில் சிறந்த மாணவராக திகழ்ந்தார். தன்னுடைய 20ஆம் வயதில் தொழிற்பயிற்சியை முடித்த டீசல், ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்றார்!

ஒருமுறை டீசல் ஒரு சொற்பொழிவைக் கேட்கச் சென்றிருந்தார். அந்த சொற்பொழிவை "கார்ல் வின்ட்' என்பவர். இவர் நீராவி இயந்திரம் நிலக்கரியின் ஆற்றலில் 90 சதவீதத்தை வீணாக்குகிறது என்பதை கண்டறிந்தார். சொற்பொழிவை கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்த டீசலின் உள்ளத்தில் "கார்ல்வின்ட்' கூறிய கருத்துகள் ஆழமாகப் பதிந்தன!

Advertisement

Advertisement

சொற்பொழிவாற்றிய "கார்ல்வின்ட்' ஒரு கருவியைக் காண்பித்து அதன் செயல்பாடுகள் பற்றி விளக்கம் அளித்தார்! டீசல் அதனை மிக கவனத்துடன் கேட்டறிந்தார்! சிகரெட் பற்ற வைக்கும் கருவியில் பித்தானை அழுத்தும்போது உண்டான தீப்பொறி அதனைப் பற்ற வைக்கிறது என்பதைக் கண்டபோது அவருக்கு ஒரு சிந்தனைப் பொறி தட்டியது.

எந்திரங்களில் எரிபொருட்களால் கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்த ஏன் முயற்சி செய்யக் கூடாது? என்ற கேள்வி அவருக்குப் பிறந்தது!

திருமணம் ஆகி பிரான்ஸில் வாழ்க்கையைத் தொடங்கிய போதும் அவர் சிந்தனை புதிய எந்திரம் கண்டுபிடிக்கும் செயலிலேயே இருந்தது! கற்பனையில் தோன்றிய இயந்திரத்தை காகிதத்தில் வடிவமைத்தார்! அதற்கான முழு விளக்கங்களையும் எழுதினார்!

ருடால்ஃப் டீசலின் திறமையைப் புரிந்துகொண்ட பலரும் அவரது ஆராய்ச்சிக்கும் இயந்திரம் உருவாக்கும் பணிக்கும் முதலீடு செய்ய முன் வந்தார்கள்! "கரூப்' என்பவர் டீசலின் ஆராய்ச்சிக்குப் பண உதவி செய்தார்.

1893ஆம் ஆண்டு இயந்திரம் பரிசோதனைக்குத் தயாராக நின்றது! சோதனையும் ஆரம்பமானது! டீசல் எதிர்பார்த்தது போலவே இயந்திரம் இயங்கியது!

முதல் முயற்சியில் வெற்றி பெற்ற டீசல், அந்த முறையைப் பின்பற்றியே நான்கு ஆண்டுகள் உழைத்து முழுமையான இயந்திரத்தை உருவாக்கினார்! டீசல் உருவாக்கிய இந்த இயந்திரம் 25 குதிரை சக்தி கொண்டது! தொடக்கத்தில் இந்த இயந்திரம் நிலக்கரிப் பொடியின் மூலம் இயக்கப்பட்டது! விளக்கெண்ணெய், மீன் எண்ணெய், பருப்பு விதை எண்ணை, போன்றவற்றையும் பயன்படுத்தினார்.

பதினைந்து ஆண்டுகளில் ருடால்ஃப் டீசலின் இயந்திரம் ஐரோப்பா முழுவதும் பிரபலம் அடைந்தது! டீசலுக்குப் பணமும் பொருளும் குவிந்தன! மியூனிச் நகரில் ஒரு மாளிகையைக் கட்டிக் குடியேறினார்!

1912ஆம் ஆண்டு ருடால்ஃப் டீசல் தன்னுடைய கண்டுபிடிப்பை அமெரிக்காவில் வெளியிட முடிவு செய்தார்! 1913ஆம் ஆண்டு ருடால்ஃப் டீசல் லண்டனுக்குக் கப்பலில் சென்றபோது மரணம் அடைந்தார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments