முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா?

சாகு' என்றால், பண்டம். அதாவது விளைபொருள். படி' என்றால் செய்தல். விளையும் பயிரை உற்பத்தி செய்வது சாகுபடி' ஆகும்.

Updated On : 7 ஜூன் 2026, 12:01 am IST
பகிர்:

சாகு' என்றால், பண்டம். அதாவது விளைபொருள். படி' என்றால் செய்தல். விளையும் பயிரை உற்பத்தி செய்வது சாகுபடி' ஆகும்.

அத்தி மரம் மட்டுமல்ல; அரச மரம், ஆலமரத்திலும் கூட பூக்களைக் காண இயலாது. அதாவது நம் பார்வைக்குப் புலப்படாது.

சிரியா நாட்டின் தலைநகரமாக கடந்த 4,500 ஆண்டுகளாக டமாஸ்கஸ் இருந்து வருகிறது.

Advertisement

Advertisement

காத்திரம்' என்றால் உடல். திடம்' என்றால் உறுதி. உறுதியான உடல்' என்ற பொருளிலேயே திடகாத்திரம்' என்ற தொடர் கையாளப்படுகிறது.

தந்தம்' என்றாலே யானைகள்தான் நினைவுகள் வரும். இருப்பினும், நீரில் வாழும் சீல் குடும்பத்தைச் சேர்ந்த வால்ரஸ்' போன்ற உயிரினத்துக்கும் தந்தம் உண்டு.

இரவில் உறங்குவது இன்துயில்'. அது மிகை நேரமாக இருந்தால், நீள்துயில். பாதி உறக்கமும், பாதி விழிப்புமாக இருந்தால், அது அறிதுயில். பிற்பகல் உணவு முடிந்து சற்றே கண் அயர்வது சிறுதுயில்'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.