FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உலகம் பலவிதம்

இங்கிலாந்தில் சின்மயா மிஷன் கல்விச் சேவையை தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன.

20 வினாடிகள் முன்பு
பகிர்:

தேம்ஸ் நதியில் கங்கா ஆரத்தி!

இங்கிலாந்தில் சின்மயா மிஷன் கல்விச் சேவையை தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் விதமாக இங்கிலாந்தில் தேம்ஸ் நதியில் கங்கா ஆரத்தி விழா நடத்தினர். இந்தியாவில் கங்கை நதிக்கு பூசை செய்வதை கங்கா ஆரத்தி என்கிறோம். தீபங்கள் ஏற்றி கங்கையை தெய்வமாகப் பூசிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு படித்துறையில் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள். லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கங்கா ஆரத்தியில் இந்துக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.

நதியை தீபங்கள் கொண்டு ஆரத்தி செய்து வணங்கும் இந்தியப் பண்பாட்டை லண்டனில் தேம்ஸ் நதியில் மறுஉருவாக்கம் செய்துள்ளோம்'' என்கிறார் சின்மயா மிஷன் ஆசிரியை பிரம்மசாரி ஸ்ரீபிரியா சைத்தன்யா.

Advertisement

Advertisement

பொன்விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே...

துருக்கியில் வென் என்ற நகரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. மணமகன், மணமகளுக்கு ஒரு கிலோ தங்க நகைகளை கல்யாணப் பரிசாக அணிவித்தார். கல்யாணம் நடந்து கொண்டிருந்தபோதே இந்த விவகாரம் காற்றாய் பரவியது. கல்யாண மண்டபத்துக்கு போலீசார் வந்தனர். ஒரு கிலோ தங்கம் வாங்குவதற்கான பணம் ஏது என்று விசாரித்தனர். மணமகனால் பதில் சொல்ல முடியவில்லை. வழக்குப் பதிவு செய்து, அதே இடத்தில் கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டனர்.

கல்யாணம் இப்படியாக சோகத்தில் முடிந்தது. விருந்தினர்கள், நண்பர்கள் எல்லாரும் ஏன் இப்படி வெளிப்படையாக தங்கத்தை காட்சிப்படுத்த வேண்டும் என்று மணமகனை திட்டித் தீர்த்தார்கள்.

ஏ.ஐ. லைப் ஜாக்கெட்

படகுப் பயணங்களின்போது உடலில் லைப் ஜாக்கெட்' எனப்படும் உயிர்க்காப்பு மிதவை அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். பல சம்பவங்களில் பலர் இதை அணிவதில்லை. விபத்துகளின்போது இவர்கள் நீரில் மூழ்கி இறக்கிறார்கள். விமானப் பயணங்களின்போது, இத்தகைய லைப் ஜாக்கெட் இருக்கையின் கீழே இருப்பதாக பணிப்பெண் சொல்கிறார். ஆனால், விமானம் தண்ணீரில் விழும்போது, யார் மிக கவனமாக இருக்கை அடியில் இருக்கும் லைப் ஜாக்கெட்டை எடுத்து மாட்ட முடியும்?

இவ்வாறு லைப் ஜாக்கெட் அல்லது லைப்பாய் இல்லாமல் நீரில் தத்தளிக்கும் நபர்களைக் காப்பாற்ற சீனா ஏ.ஐ. மூலம் செயல்படும் லைப்பாய்களைப் பயன்படுத்தும் செயல்விளக்கத்தைச் செய்து காட்டியுள்ளது. விபத்து நடந்தவுடன் ஏ.ஐ. செயல்படும். நீரில் தத்தளிக்கும் பயணியின் மீது ஏ.ஐ. லைப்பாய் நேராக வந்து விழும். அவர் அதைப் பிடித்துக் கொண்டு நீரில் மிதந்து உயிர் பிழைப்பார். டிரோன் மூலமும் லைப் ஜாக்கெட் இந்தச் செயல்விளக்கத்தின்போது போடப்பட்டது.

சீனாவுக்கு கழுதைத் தோல் ஏற்றுமதி!

சீனாவில் கழுதைகள் கிடையாது. ஆனால், கழுதைகளின் தோலை வேக வைத்து, அதிலிருந்து கிடைக்கும் திரவம் சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சீனாவுக்கு கழுதைகள் இறைச்சி மற்றும் தோலை பாகிஸ்தான் அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. குவாதர் நகரில் வெட்டப்படும் கழுதைகளின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 800 ஆக உயர்த்தியுள்ளனர். அப்பகுதியில் உள்ளவர்கள் கழுதை இறைச்சியை விரும்பிச் சாப்பிடுபவர்கள். ஆனால், நிறைய பணம் கிடைப்பதால் எல்லாவற்றையும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். கழுதைகளுக்கு அதிக டிமாண்ட். ஆகவே கழுதைகள் அதிகளவில் திருடுபோகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments