முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

360 டிகிரி

"இங்கிதம்' என்ற சொல்லுக்கு இனிமை, உட்பொருள், எண்ணக்குறிப்பு என்றும் அர்த்தமுண்டு.

Updated On : 22 ஜூலை 2018, 10:00 am IST
பகிர்:

"இங்கிதம்' என்ற சொல்லுக்கு இனிமை, உட்பொருள், எண்ணக்குறிப்பு என்றும் அர்த்தமுண்டு. இதற்கு மாறாகப் பேசுபவர்களை "இங்கிதம் தெரியாதவர்' என்று கூறுவதுண்டு. வள்ளலார் "இங்கித மாலை', "இங்கிதம் பத்து' என்ற பெயர்களில் நூற்பாடல்களைப் பாடியுள்ளார்.

ராமனாதியர்களில் சத்ருக்கனன், இராவணாதியர்களில் விபீஷணன், துரியோதனாதியர்களில் விகர்ணன், சூரபத்மனாதியர்களில் காராகாசுரன், பாண்டவர்களில் சகாதேவன் ஆகியோர் ஞானிகளாவார். இவர்கள் அனைவரும் கடைக்குட்டிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வாதிகாரி என்றாலும் ஹிட்லர் தாய்ப்பாசம் மிக்கவர். எப்போதும் தன் சட்டைப்பையில் தன் தாயின் படத்தை வைத்திருப்பாராம். அவர் தற்கொலை செய்தபோது கூட தன் அம்மாவின் படத்தை கையில் வைத்திருந்தாராம்.

Advertisement

Advertisement

ஆர்மோனியப் பெட்டிகள் "ரெட்சீயம்' எனப்படும் ஒரு வகை மர வேம்பு மரத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை மரப் பலகைகளுக்குத் தான் இசையை சேதமில்லாமல் வெளிப்படுத்தும் தன்மை உண்டு. இந்த வகை மரங்களுக்குத்தான் இசையை சேதமில்லாமல் வெளிப்படுத்தும் தன்மை உண்டு.

-நெ.இராமன்

உலகிலேயே ஆப்பிள் அதிகமாக விளையும் நாடு ரஷியா.

உலகில் முதன்முதலாக நாள்காட்டியை உருவாக்கியவர் ரோமாபுரி மன்னர் ஜூலியஸ் சீசர்.

"காந்தம்' (Magnet) முதன்முதலாக கண்டெடுக்கப்பட்ட இடம் மக்னீஷியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments