முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

குருவுக்கு மரியாதை!

சென்னையில் செயல்பட்டு வரும் "டெல்ஃபி -டிவிஎஸ்' நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று தமது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை அழைத்து

Updated On : 20 செப்டம்பர் 2020, 6:00 am IST
பகிர்:

சென்னையில் செயல்பட்டு வரும் "டெல்ஃபி -டிவிஎஸ்' நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று தமது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை அழைத்து சிறப்பு செய்து வருகிறது. இந்த வழக்கம் கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்கிறது. 
இந்த மரபைத் தொடங்கி வைத்தவர் மனிதவள மேம்பாட்டுத் துறையின் முன்னாள் துணைப்  பொறுப்பாளராக இருந்த  முனைவர் வெங்கட்ராமன். தொழிலாளர்களின்  ஆசிரியர்களைக் கெளரவிக்கும் காரணத்தை அவரே விளக்குகிறார்:

""மாதா, பிதா, குரு, தெய்வம் என்று மூன்றாவது இடத்தில் வைத்து ஆசிரியர்களை நாம் மதித்து வருகிறோம். தொழிலாளர்கள் தங்களுக்கு வேலைகளைக் கற்றுத்தரும்  சீனியர் தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள், மேலாளர்கள் மற்றும் சக ஊழியர்களை மதிக்க  வேண்டும் என்பதை நேரடியாகச் சொன்னால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். 

அதே சமயம் அவர்களுக்கு  கல்வி கற்றுக் கொடுத்த  அவர்களுக்குப்  பிடித்த ஆசிரியர்களை தொழிற்கூடத்திற்கு வரவழைத்து  அந்தத்  தொழிலாளியைக் கொண்டே ஆசிரியரைப் பாராட்டிப் பேச வைக்கும் போது, "எழுத்து சொல்லிக் கொடுப்பது போலத்தான் தொழில் சொல்லிக் கொடுப்பது... கல்வி கற்றுத் தந்த ஆசிரியரை மதிப்பது போல தொழில் கற்றுத்தரும் சீனியர்களையும் மதித்து நடக்க வேண்டும்' என்று தோன்றும். இந்த யுக்தி நல்ல பலன் அளித்தது.  

Advertisement

எங்கள் நிறுவனத்திற்கு ஜப்பானிய தொழில் நிபுணர்கள் வருகை தருவார்கள். அவர்கள் பேசுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க  ஜப்பான் மொழி தெரிந்த பிளஸ் -1 மாணவியை அழைத்திருந்தோம். அந்த மாணவியின் ஆங்கில மொழி பெயர்ப்பைக் கேட்ட  தொழிலாளர்கள் அசந்து போனார்கள். தெரியாத மொழியைத்   தெரிந்திருப்பதில்  எப்படியெல்லாம்  மதிப்பு மரியாதை வந்து சேரும் என்பதை  தொழிலாளர்கள் நேரடியாக உணர்ந்தார்கள். அவர்களும் வாழ்க்கையில் முன்னேறத்  தங்களது தகுதிகளை உயர்த்திக் கொள்ள ஆரம்பித்தார்கள். இச்சம்பவத்துக்குப் பிறகு தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்துக் கொண்டே மேலே படித்தனர். அவர்களது வாழ்க்கைத் தரமும் உயரத் தொடங்கியது'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.