FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தோடி ராகம் பாடவா..?

கச்சேரி ஒன்றில் வாசித்துகொண்டிருந்தார் நாகசுவர கலைஞர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையை அசர வைத்தார் பெட்ரோமாக்ஸ் லைட் பிடிக்கும் பணியாளர் ஒருவர்.  

Updated On : 19 நவம்பர் 2023, 12:00 am IST
பகிர்:

கச்சேரி ஒன்றில் வாசித்துகொண்டிருந்தார் நாகசுவர கலைஞர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையை அசர வைத்தார் பெட்ரோமாக்ஸ் லைட் பிடிக்கும் பணியாளர் ஒருவர்.
சில ராகங்களை இசைத்துவிட்டு சீவாளியை சரி செய்தவுடன், தோடியில் பாட ராஜரத்தினம்பிள்ளை பல்லவியை எடுத்தார். அப்போது ""சபாஷ்' என்றொரு குரல் கேட்டது.
அங்கே நின்ற பெட்ரோமாக்ஸ் லைட் பணியாளர் தூக்கும் ஒருவனிடம், ""யார் நீயா.. சபாஷ் போட்டது..'' என்றார். அந்த நபரும் பணிவோடு, ""ஆமாங்க ஐயா'' என்றார்.
""ஏன் அப்படி சொன்னாய்'' என்று ராஜரத்தினம் பிள்ளை கேட்டார்.
""தோடியில் வாசிக்கப் போறீங்களே. அதற்காகதான்'' என்றார் பணியாளர்.
""தோடி உங்களுக்குத் தெரியுமா?'' என்றார் பிள்ளை.
""உங்கள் கச்சேரிக்கு எல்லாம் வந்து லைட் தூக்கி, தூக்கி எனக்கு ராகங்களின் பெயர் பழகிவிட்டது ஐயா..'' என்று கூறி, விசில் மூலம் தோடியை பாடியும் காட்டினார் அந்தப் பணியாளர்.
கேட்டதும் அசந்துவிட்டார் ராஜரத்தினம் பிள்ளை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments