முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மெட்ராஸ்காரன்

மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்த இளம் நடிகர் ஷேன் நிகம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 12:00 AM
மெட்ராஸ்காரன்
பகிர்:
Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 11:08 PM

மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்த இளம் நடிகர் ஷேன் நிகம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இயக்குநர் வாலி மோகன்தாஸ் எழுதி, இயக்கும் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். கலையரசன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... ""சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் எல்லாரும் லீவுக்கு அவரவர்கள் ஊருக்கு போகும் போதும் அவர்களை "மெட்ராஸ்காரன்'னு சொல்வதுண்டு. அந்த மாதிரி சென்னைக்கு வந்த ஊர்க்கார பையன்தான் ஷேன் நிகாம்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 11:08 PM

இந்தக் கதை சென்னையில 10 சதவிகிதம்தான் நடக்கும். மற்றபடி மதுரை, புதுக்கோட்டையில் நடக்குற கதை. ஆர்.டி.எக்ஸ் உள்ளிட்ட ஹிட் படங்களை மலையாளத்தில் கொடுத்த ஷேன் நிகம் இதில் முழுக்க முழுக்க நார்மல் தமிழில் பேசி நடித்திருக்கிறார். ஷேன் நிகம், கலையரசன் இரண்டு பேருமே கதையின் நாயகர்கள்தான். இவர்கள் இரண்டு பேருக்கு இருக்கிற ஒரு சின்ன ஈகோ, இவர்களின் வாழ்க்கையை எங்க கொண்டு போய் நிறுத்தியது என்பதுதான் படத்தின் ஒன் லைன். இதில் இவர் நல்லவர்; இவர் கெட்டவர் என்று பிரிக்க முடியாது. இரண்டு பேருமே நல்லவர்கள்; இரண்டு பேருமே கெட்டவர்கள். இவர்களின் உலகத்துக்குள்தான் இந்தப் படம் பயணிக்கும். இந்தக் கதையை எழுதும் போதே ஷேன் நிகமை மனதில் வைத்துதான் எழுதினேன்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 11:08 PM

ஷேன் நிகமை அவரின் கரியர் ஆரம்பத்தில் இருந்து பார்த்து வருகிறேன். ரொம்ப எதார்த்தமாக நடிக்கக்கூடியவர். "மெட்ராஸ்காரன்' கதையை படமாக்கலாம் என்று முடிவு எடுத்த சமயம்தான் அவரோட " ஆர்.டி.எக்ஸ்' படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. நான் நினைத்த மாதிரி இந்தக் கதைக்கு ஏற்ற, தமிழுக்கு புதுமையான முகமாகவும் ஷேன் நிகாம் இருப்பார்'' என்றார் இயக்குநர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.