FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி.

27 ஜூன் 2026, 9:50 pm IST
- -
பகிர்:

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லயோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

கால்பந்தைப் பொருத்தவரை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) நடத்தும் உலகக் கோப்பை போட்டி மிகவும் பிரபலமானது. ஒலிம்பிக் போட்டியில் கால்பந்தில் தங்கம் வெல்வதைக் காட்டிலும், பிஃபா உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று அதில் வெல்வது பெரும்பாலான அணிகளின் கனவாகும். சர்வதேச அளவில் பிலே (பிரேஸில்), டீகோ மாரடோனா (ஆர்ஜென்டீனா), ஜோஹன் கிரையஃப் (நெதர்லாந்து) ஆகியோர் எப்போதும் புகழப்படும் வீரர்களாக திகழ்கின்றனர்.

25 ஆண்டுகளுக்கு மேலாக கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), லயோனல் மெஸ்ஸி (ஆர்ஜென்டீனா), நெய்மர் (பிரேஸில்) ஆகியோர் சிறந்த வீரர்களாக வலம் வருகின்றனர். இவர்களில் மெஸ்ஸியும், ரொனால்டோவும் அதிக முறை தங்கக் காலணி விருதை வென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

லீக் ஆட்டங்களில் மெஸ்ஸி, ரொனால்டோ சிறப்பாக ஆடினாலும், உலகக் கோப்பையில் மெஸ்ஸிக்கு அதிருஷ்டம் உள்ளது.

2006-ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆடி வரும் மெஸ்ஸி 2022-இல் கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடி தனது நாட்டுக்கு கோப்பையை பெற்றுத் தந்தார். ஜாம்பவான் மாரடோனாவுக்குபின் உலகக்கோப்பை வசப்படாத நிலையில், 1986-க்குப் பின்னர் மெஸ்ஸி கோப்பையை பெற்றுத் தந்தார்.

தற்போது தனது 6-ஆவது போட்டியில் ஆடி வருகிறார். அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய 3 நாடுகள் இணைந்து 2026 போட்டியை நடத்தி வருகின்றன. தற்போது நடப்பு சாம்பியன் அந்தஸ்தில் ஆர்ஜென்டீனா ஆடி வருகிறது.இப்போட்டியிலும் கேப்டன் மெஸ்ஸியின் மாயாஜாலம் அனைவரையும் கவர்ந்து வருகிறது. 201 சர்வதேச ஆட்டங்களில் தனது அணிக்காக 121 கோல்களை அடித்துள்ளார் மெஸ்ஸி.

இந்த நிலையில் அல்ஜீரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்தார். அதிக கோல்கள் அடித்த வீரர் மிரஸ்லோவ் க்ளோஸ் 16 கோல்கள் சாதனையாக இருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்களை அடித்து மெஸ்ஸி உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். (18 கோல்கள்). பிலே, மாரடோனா, ஜோஹன் கிரையஃப் ஆகியோர் தங்கள் காலத்தில் சிறந்து விளங்கினாலும், மெஸ்ஸியின் உடல்திறன், நீடித்த ஆட்டத்தால் தனித்துவமாக உள்ளார்.

6 உலகக் கோப்பையிலும் கோல்கள்

கடந்த 2006 முதல் 2026-ஆம் ஆண்டு வரை தான் பங்கேற்ற 6 உலகக் கோப்பை போட்டிகளிலும் கோலடித்தார். இதன் மூலம் பிரான்ஸின் ஜஸ்ட் போன்டைன், பிரேஸிலின் ஜைர்ஸின்ஹோ ஆகியோரின் சாதனைகளை சமன் செய்தார்.

1962-இல் பிரேஸில் அணி அடுத்தடுத்து 2 முறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது போன்று ஆர்ஜென்டீனாவும் வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் மெஸ்ஸி. முப்பத்து எட்டு வயதில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகத் திகழும் மெஸ்ஸியின் சாதனைகள் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments