FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எதிர்பார்ப்பு...

நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்.

14 நவம்பர் 2026, 10:31 pm
சமந்தா
பகிர்:

நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார். தனது கர்ப்ப கால உணவுப் பழக்கத்திலிருந்து உடற்பயிற்சி முறை, கணவர் ராஜ் நிதிமோருவுடனான பேபிமூன் சுற்றுலா வரை, இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். கர்ப்பத்தின் முதல் மாதத்தில் இருந்து 9- ஆவது மாதம் வரையிலான தனது உடற்பயிற்சிகளை விடியோவாகப் பதிவிட்டுள்ளார்.

தற்போது அவர் உடற்பயிற்சிக்கூடத்தில் அதிக எடையுள்ள உபகரணங்களை வைத்து பயிற்சி செய்யும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். கர்ப்ப காலத்தில் எடையுள்ள பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று பலரும் நினைப்பதால், அவரது உடற்பயிற்சி புகைப்படங்கள் விரைவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.