FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எளிய மனித வாழ்வு

கிரின்ஞ் ஃபயர் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'பித்தன்'. வில்லன் மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் இதுவரை நடித்து வந்த 'மைம்' கோபி இப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிறார்.

14 நவம்பர் 2026, 10:42 pm
பகிர்:

கிரின்ஞ் ஃபயர் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'பித்தன்'. வில்லன் மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் இதுவரை நடித்து வந்த 'மைம்' கோபி இப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிறார். சினேகா, ஆடுகளம் முருகதாஸ், ஆர்யன், கூல் சுரேஷ், கல்கி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் வினய் நாராயணன்.

படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 'வேறு ஒரு திரைக்கதைக்கான சில ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு விஷயம் என் கண்ணில்பட்டது. அது ஓர் உண்மைச் சம்பவம். எதார்த்தம் என்பது கற்பனையைக் காட்டிலும் விநோதமானது. அதிசயத்தக்கது. அது மாதிரியான ஒரு சம்பவம் அது.

Advertisement

Advertisement

இது மாதிரி நடக்குமா என்றுகூடத் தோன்றியது. அதைப் பின் தொடர்ந்து போய்ப் பார்த்தால், உலகம் நெடுகிலும் அந்தப் பிரச்னை நடந்துகொண்டே இருப்பதாகத் தெரிந்தது. கொஞ்சம் நிதானித்துப் பார்த்தால், அதில் சினிமாவுக்கான அவ்வளவு சங்கதிகள் இருந்தன. அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இதன் ஆரம்பப் புள்ளி.

பிளாக் காமெடியாக எழுதவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன். ஆனால், கதை ஒரு கட்டத்துக்குப் பின் தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்பார்கள். அப்படி அதன் அம்சங்களை இந்தக் கதை அதுவாகவே தேடிக் கொண்டது. அப்படி ஆரம்பமான ஒரு பயணம்தான் இப்போது இறுதிக் கட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஒரு எளிய மனிதனை அதிகாரமும், ஆள் பலமும் எப்படியெல்லாம் துரத்தி அடிக்கிறது என்பதுதான் திரைக்கதை' என்றார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.