சின்னதிரை - இரு மலர்கள்
சன் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு 'இரு மலர்கள்' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு 'இரு மலர்கள்' தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை ஹிமா பிந்து, ஜீவிதா ஆகியோர் அக்கா - தங்கையாக முதன்மைப் பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நாயகனாக 'ரஞ்சனி' தொடரின் நடிகர் சந்தோஷ் நடித்து வருகிறார்.
இரு மலர்கள் தொடரில் சந்தோஷுக்கு ஜோடியாக ஹிமா பிந்து நடித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில், குடும்பச் சூழலால் தங்கை ஜீவிதாவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். தற்போது எதிர்பாராத திருப்பமாக சந்தோஷ் - ஜீவிதாவுக்குத் திருமணம் நடந்துள்ளது.
கணவன் - மனைவியாக இருவருக்கும் இடையிலான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்பாராத இந்தத் திருப்பம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுமா? என்ற சந்தேகம் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து ஏற்றுக்கொண்டதாகவும் நடிகை ஜீவிதா தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுகுறித்துப் பேசியுள்ள அவர், 'இரு மலர்கள் தொடரில் எங்கள் ஜோடி பலரின் மனதைக் கவரும் வகையில் இருக்கும் என நினைக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார். மேலும், 'ரஞ்சனி தொடரைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் இரு மலர்கள் தொடரிலும் ஜோடியாக நடிப்பதால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்று இருந்த சந்தேகம் இதன்மூலம் தீர்ந்துவிட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார்.