இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
தொழிலில் தடைகள் அகலும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம், மனம் வளம் மேம்பாடு அடையும்.
ஆன்மிகத்தில் ஈடுபடுவீர். உத்தியோகஸ்தர்களின் பணிகள் சுலபமாக நிறைவேறும். வியாபாரிகள் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பார்கள். விவசாயப் பணிகள் தாமதமாக நிறைவேறும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பேராதரவைப் பெறுவீர். கலைத்துறையினர் பயணம் செய்வீர். பெண்களுக்கு மருத்துவச் செலவு உண்டாகும். மாணவர்கள் பொது அறிவுப் புத்தகங்களைப் படிப்பார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
திட்டமிட்ட பணிகள் சாதகமாக முடிவடையும். மகிழ்ச்சியை அளிக்கும் செய்திகள் வரும். பண வரவு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் கவனத்துடன் நடந்துகொள்வார்கள்.
விவசாயிகள் கடுமையாக உழைப்பார்கள். அரசியல்வாதிகள் அநாவசியப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினர் நேர்வழியில் சிந்திப்பீர்.
பெண்கள் கணவரின் எண்ணம்போல செயல்படுவார்கள். மாணவர்கள் உழைத்து வெற்றி பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
அரசின் சலுகைகள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பணம் கைக்கு வரும். துணிந்து செய்யும் வேலைகளில் வெற்றி உண்டாகும்.
ஆற்றல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் மேன்மையடையும். விவசாயிகள் போட்டிகளைச் சமாளித்து வெற்றி பெறுவார்கள்.
அரசியல்வாதிகள் வழக்குகளில் விடுதலை பெறுவார்கள். கலைத்துறையினர் ரசிகர்களுக்கு உதவுவார்கள். பெண்கள் யோகா, தியானத்தைக் கற்றுக் கொள்வார்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் பாதுகாப்பாக ஈடுபடுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
குடும்பத்தில் அமைதி நிலவும். பண வரவு சீராக இருக்கும். வேலைகள் குறித்த நேரத்துக்குள் நிறைவடையும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனம் செலுத்துவார்கள். வியாபாரிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்துவார்கள். விவசாயிகளுக்கு பிறரின் ஆதரவு கிடைக்கும்.
அரசியல்வாதிகள் பணிகளால் புகழ் அடைவார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் குழப்பங்கள் தீர மனம் விட்டுப் பேசி தீர்வு காணலாம். மாணவர்கள் கோரிக்கை நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
பொருளாதாரத்தில் மேன்மை கிடைக்கும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். கோயில் திருப்பணிக்கு உதவிடுவீர்.
உத்தியோகஸ்தர்கள் பிறருடன் அன்பாகப் பழகுவார்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகமாகி, லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு நெருங்கியவர்கள் மூலமாக இடையூறு உண்டாகும். கலைத்துறையினர் தங்களது கருத்துகளைப் பிறரிடம் திணிக்க வேண்டாம். பெண்களுக்கு நிம்மதி குறையும். மாணவர்கள் அறிவுசார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி தலைதூக்கும். தீயவர்களின் நட்பை குறைக்கவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டாகும். வியாபாரிகள் புதிய நட்பால் உயர்வடைவார்கள். விவசாயிகளுக்கு குத்தகை பாக்கி வசூலாகும். அரசியல்வாதிகள் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
கலைத்துறையினர் புதிய பயிற்சிகளைக் கற்றுக் கொள்வார்கள். பெண்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் பொறுப்புடன் நடப்பார்கள்.
சந்திராஷ்டமம் - 22.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். பண வரவு உண்டாகும். புகழ், அந்தஸ்து கூடும். தனித்திறமைகள் வெளிப்படும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம்.
வியாபாரிகள் கடனுக்கு விற்பதைக் குறைத்துக்கொள்ளவும். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவர்.
கலைத்துறையினருக்கு புதிய பயணங்களால் நன்மை கிடைக்காது. பெண்கள் கணவருடன் ஒற்றுமையாகப் பழகுவார்கள். மாணவர்கள் எதிர்காலத்துக்கான திட்டங்களைத் தீட்டுவார்கள்.
சந்திராஷ்டமம் - 23,24.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
உடல் நலம் சிறப்பாக இருக்கும். வாட்டி வதைத்த நோய்கள் மறையும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சிக்கனமாக நடந்துகொள்வீர்.
உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்க முடியாது. வியாபாரிகள் கடன் வாங்கி, வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகள் மனக் குழப்பங்களுக்கு ஆளாவார்கள்.
அரசியல்வாதிகள் மதிநுட்பத் திறத்தால் செயற்கரிய காரியங்களைச் செய்வார்கள். கலைத்துறையினர் கடினமாக உழைப்பார்கள். பெண்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
சந்திராஷ்டமம் - 25,26,27.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
அறிவுசார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் வேலைகளை கருத்தாகச் செய்து முடிப்பார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவருவார்கள். விவசாயிகள் புழு, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவார்கள்.
அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களை எளிதில் முடித்து நற்பெயரை எடுப்பார்கள். கலைத்துறையினருக்குப் பாராட்டு கிடைக்கும். பெண்கள் உடன்பிறந்தோரின் ரகசியங்களைக் காப்பார்கள். மாணவர்கள் நபர்களை முழுமையாக நம்ப வேண்டாம்.
சந்திராஷ்டமம் - 28.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். தொழிலைத் திறம்பட நடத்துவீர்கள். பொருளாதாரத்தில் இருந்த பின்னடைவுகள் குறையும். இல்லத்தில் புத்திரப் பேறு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள். வியாபாரிகளின் அந்தஸ்து உயரும். விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்துவார்கள். அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வார்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
குடும்பப் பிரச்னைகள் தீரும். உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சாதகமாக முடியும்.
வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். விவசாயிகள் உபகரணங்களைக் கவனத்துடன் பராமரிக்கவும். அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள்.
கலைத்துறையினருக்கு பிறர் உதவிகள் கிடைக்கும். பெண்கள் உடல் நலம் மேம்பட ஆகார விஷயங்களில் கவனமாக இருப்பார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
வருவாய் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் முன்னேற்ற சூழலைக் காண்பார்கள்.
வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப்பூர்த்தி செய்வார்கள். விவசாயிகள் கால்நடைகளைக் கவனத்துடன் பராமரிப்பார்கள்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினருடன் எச்சரிக்கையுடன் பழகுவார்கள். கலைத்துறையினர் புதிய சேமிப்புகளில் ஈடுபடுவார்கள்.
பெண்கள் கணவர் வழி உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வார்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டு களில் வெற்றி பெறுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.