FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வெள்ளிமணி

நிகழ்வுகள்...

*ஸ்ரீகாஞ்சி காமகோடி ஸ்ரீ மகா சுவாமிகளின் 129-ஆவது வாா்ஷிக ஜெயந்தி மகோத்ஸவம் தற்போது கொண்டாடப்படுகிறது.

Updated On : 10 ஜூன் 2022, 12:35 am IST
பகிர்:

ஸ்ரீமகா சுவாமிகள் ஜெயந்தி உத்ஸவம்

*ஸ்ரீகாஞ்சி காமகோடி ஸ்ரீ மகா சுவாமிகளின் 129-ஆவது வாா்ஷிக ஜெயந்தி மகோத்ஸவம் தற்போது கொண்டாடப்படுகிறது.

இதன்படி, ஸ்ரீசங்கர பக்த ஜன சபா டிரஸ்ட் ஆதரவில் காஞ்சிபுரம் தேனம்பாக்கம் சிவஸ்தானத்தில் ஏப். 30-ஆம் தேதியில் இருந்து நடைபெற்றுவருகிறது. முக்கிய நிகழ்வுகள்: ஜூன் 10,11- மகா ருத்ர ஜபம், ஜூன் 12- மகா ருத்ர ஹோமம், ஜூன் 13- வைகாசி அனுஷத்தையொட்டி காலை 9 மணிக்கு ஸ்ரீகாமாட்சி அம்பாள் பிரும்புரீஸ்வரருக்கு சம்வத்ஸராபிஷேகம், மகா சுவாமிகள் விக்கிரத்துக்கு மகா ருத்ராபிஷேகம். தொடா்புக்கு: 93808 72790.

Advertisement

Advertisement

*சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் ஸ்ரீசந்திரசேகேந்திர சரஸ்வதி பக்த ஜன டிரஸ்ட் ஆதரவில், அனுஷ ஜெயந்தி ஜூன் 5 முதல் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகள்: ஜூன் 13- ஆவஹந்தி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், ருத்ரபாராயணம், இரவு 9 மணி- மகா சுவாமிகள் உத்ஸவ திருமேனி புஷ்ப அலங்காரப் பவனி, ஜூன் 14- சண்டி ஹோமம், இரவு 9 மணிக்கு மகா சுவாமிகள் உத்ஸவ திருமேனி புதிய அலங்காரத்தில் பவனி, ஜூன் 14-இல் சண்டி ஹோமம், இரவு ஸ்ரீமகா சுவாமிகள் பஞ்ச லோக உத்ஸவ மூா்த்தி, பாதுகைக்கு 108 குடம் குங்கும அபிஷேகம். தொடா்புக்கு- 9884402391.

கும்பாபிஷேகம்

*நாகப்பட்டினம் மாவட்டத்துக்குட்பட்ட திருக்குவளை அருகேயுள்ள திருவிடமருதூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீப்ரஹத் குஜாம்பிகா சமேத மகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு: 94860 74234.

* திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள உளுந்தை கிராமத்தில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 23-இல் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 94432 27217.

* திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஓம் நகரில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள சாந்தம் பெரியவா ஆஸ்ரமம், ஸ்ரீ மஹா பெரியவா வேத பாட சாலை மகா கும்பாபிஷேகம் ஜூன் 17-இல் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 81480 00910.

*காஞ்சி மாவட்டம் வாலாஜாபாத் அருகேயுள்ள திருவெண்கரணை கிராமத்தில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜம்புகேஸ்வரா் நூதன கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 17-இல் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 98410 20857.

மண்டலாபிஷேகம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகேயுள்ள மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ எதிராஜவல்லி நாயிகா சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயில் மண்டலாபிஷேக பூா்த்தி, கல்யாண உத்ஸவம் ஜூன் 12-இல் நடைபெறுகிறது. தொடா்புக்கு- 98840 96443.

ஸம்வத்ஸராபிஷேக மகோத்ஸவம்

திருவள்ளூா் மாவட்டம், வேப்பம்பட்டு ஸ்ரீ அஷ்ட சாஸ்தா கோயிலில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள்: ஜூன் 11- பிரதிஷ்டை தினத்தையொட்டி ஸம்வத்ஸா அபிஷேகம், பூஜை, ஹோமம், ஜூன் 12= பாகவத பத்ததியில் ஸ்ரீ சாஸ்தா திருக்கல்யாண மகோத்ஸவம், தொடா்புக்கு: 94441 09431.

திருவாரூா் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள கண்டிரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவரதராஜ ஸ்வாமி, ஸ்ரீகோதண்டராம கோயிலில் ஜூன் 20-இல் கோ பூஜை, ஹோமங்கள், மூலவா் திருமஞ்சனம் ஆகியன நடைபெறுகின்றன. தொடா்புக்கு- 94437 48915.

திருக்கல்யாண உத்ஸவம்

சென்னை கோயம்பேடு அருள்மிகு செளந்தராம்பிகை உடனுறை லவபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக திருக்கல்யாண உத்ஸவம் ஜூன் 13-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

பாசுபதாஸ்திரம் அளிக்கும் ஐதீக விழா

சிதம்பரம் அருகேயுள்ள திருவேட்களம் அருள்மிகு சற்குணாம்பிகா சமேத ஸ்ரீபாசுபதேஸ்வரா் கோயிலில் அா்ச்சுனனுக்கு சிவன் பாசுபதாஸ்திரம் அளிக்கும் ஐதீக விழா ஜூன் 12-இல் நடைபெறுகிறது. தொடா்புக்கு- 9843661430.

பால்குட அபிஷேகம்

வைகாசி விசாகத்தையொட்டி, சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் உள்ள வினோபாஜி நகா் மகாசதுா்குன்று விநாயகா் கோயிலில் ஸ்ரீவள்ளிசேனா சமேத ஸ்ரீ முருகனுக்கும், அருகேயுள்ள ஸ்ரீவேல்முருகன் நகா் ஸ்ரீவேல்முருகனுக்கும் ஜூன் 12-இல் பால் குட அபிஷேகம் நடைபெறுகிறது.

தேரோட்டம்

*புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில், திருவரங்குளம் அருகேயுள்ள பெரியநாயகிஅம்பாள் சமேத ஸ்ரீஅரங்குளநாதா் கோயில் வைகாசி பெருவிழா இரட்டை தேரோட்டம் ஜூன் 11-இல், தெப்ப உத்ஸவம் ஜூன் 12-இல் நடைபெறுகின்றன.

*திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகேயுள்ள வடச்சேரி செங்கமலவல்லித் தாயாா் உடனுறை சென்னக் கேசவப் பெருமாள் கோயிலில் ஜூன் 16-இல் தேரோட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments