திருப்பரங்குன்றத்தில் கிரிவலம்
மலைக்கோணங்களின் மாறுபட்ட காட்சிகளுடன் திருப்பரங்குன்றம் கிரிவலத்தின் சிறப்புகள்..
தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளில் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகக் கோயில்கள் எழுப்பிக் கொண்டாடப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம், திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று மலைகளிலும் மாதம் தவறாமல் பெüர்ணமி தினங்களின் கிரிவலங்கள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. இவைதவிர திருச்செங்கோடு, பழனி, திருமயம், பர்வதமலை உள்ளிட்ட பன்னிரண்டு மலைகளில் பெüர்ணமி தின கிரிவலங்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை பெüர்ணமி, அக்னி நட்சத்திர கிரிவலம் என்று ஆண்டின் குறிப்பிட்ட நாள்களில் கிரிவலம் நடக்கும் தலங்களும் உள்ளூர்த் திருவிழாக்களின் ஒருபகுதியாக கிரிவலம் நடைபெறும் தலங்களும் தமிழகத்தில் நிறையவே உள்ளன.
திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதை மூன்று கிலோ மீட்டருக்கும் குறைவே என்பதால் எந்த வயதினரும் செல்ல ஏற்றது. (உயரத்தில் இருக்கும் காசி விசுவநாதர் கோயில், தர்ஹா, தீபத்தூண் போன்ற இடங்களை கிரிவலத்தில் சேர்க்க வேண்டியதில்லை). முருகப்பெருமான் அவதரித்த சரவணப் பொய்கை, விநாயகர் கோயில், பத்ரகாளி அம்மன் கோயில், மத்தியான பிள்ளையார் கோயில், பால்சுனை கண்ட சிவபெருமான் கோயில், சப்தகன்னிகா பரமேஸ்வரி கோயில், பாண்டியன் கிணறு, சமணர் குகைக்கோயில், ராமகிருஷ்ண சேவாஸ்ரம், சித்தி விநாயகர் கோயில், மரத்தடிகளில் அருள்தரும் சில கிராம தேவதைகள் என்று பயணமெங்கும் நாம் வணங்கிச் செல்லக் காத்திருக்கும் ஏராளமான தெய்வங்கள் நம்மை வரவேற்றுக் களைப்புப் போக்குகின்றனர்.
Advertisement
Advertisement
கிரிவல வழியில் ஆங்காங்கே நின்று வலப்புறம் திரும்பி மலையைப் பார்த்தால், விதவிதமான வடிவத்தில் காட்சி தந்து ஆச்சரியம் அளிக்கிறது அந்தப் பர்வதம். ஒற்றைப் புல் பூண்டுக்குக் கூட வழியில்லாத வழுக்குப் பாறையாக ஒரு கோணத்தில் காட்சி அளிக்கும் மலை இன்னொரு கோணத்தில் முழுக்கப் பசுமை போர்த்தி நிற்கிறது. சில கோணங்களில் பசுமை துளிர்க்க முனையும் காட்சிகள். இன்னும் சில கோணங்களில் பார்க்கும் போது நெருக்கமான மரங்களுடன் வனம் அடர்ந்து அதே மலைதானா இது என்று பிரமிப்பு ஏற்படுகிறது. முக்கால் மணிநேரத்தில் திருப்
பரங்குன்றம் கிரிவலத்தை முடித்துவிடலாம். எல்லா நாள்களுமே கிரிவலம் செல்லலாம்.
உடற்பயிற்சிகளில் ராஜ பயிற்சி என்றால் அது நடைப்பயிற்சி தான். வயது வரம்பின்றி எல்லோரும் எப்போதும் செய்ய முடிகிற பயிற்சி அது. எவர் துணையுமின்றி நீண்டகாலம் சுயமாக நடக்க முடிய வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும்? முடியும் வரை நடக்க வேண்டும். சமமான தளத்தில் நீண்ட தூரம் நடப்பதை விட ஏற்ற இறக்கங்களில் வெவ்வேறு கோணங்களுக்குக் கால்களை மடக்கி நடப்பது கால்மூட்டுகளுக்கு வலு கொடுக்கிற விஷயம். சுயபிரக்ஞை இன்றி இதனை நிறைவேற்றிக் கொள்ள சிறந்த உபாயம், கிரிவலம்.
- பெ.நாயகி