FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கலிபோர்னியாவில் காட்டுத் தீ: 4 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு ஓட்டம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஆன்ட்ரியாஸ் வனப் பகுதியில் தீ பற்றிக்கொண்டது. இதனால் அங்குள்ள 400 வீடுகள் எரிந்து சாம்பலானது. சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் தீயில் கருகியது என ஆங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஆன்ட்ரியாஸ் வனப் பகுதியில் தீ பற்றிக்கொண்டது. இதனால் அங்குள்ள 400 வீடுகள் எரிந்து சாம்பலானது. சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் தீயில் கருகியது என ஆங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 400 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். வனப் பகுதியில் வசித்து வரும் 4 ஆயிரம் பேர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாதுகாப்பான இடம் தேடி ஓட்டம் பிடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதையடுத்து கலிபோர்னியா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments