யேமன் எல்லையில் 4 சவூதி படையினர் பலி
யேமன் எல்லைப் பகுதியில் சவூதி ராணுவத்தினர் 4 பேர் உயிரிழந்ததாக, யேமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவூதி கூட்டுப் படை தெரிவித்தது.
யேமன் எல்லைப் பகுதியில் சவூதி ராணுவத்தினர் 4 பேர் உயிரிழந்ததாக, யேமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவூதி கூட்டுப் படை தெரிவித்தது.
எனினும், அந்த நால்வரும் எந்தச் சூழலில் உயிரிழந்தனர் என்ற விவரத்தை அது வெளியிடவில்லை.
இதுகுறித்து சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "ராஜ்ரன் எல்லைப் பகுதியில், தேசத்தைக் காக்கும் பணியின்போது 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதலை சவூதி கூட்டுப் படைகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து, இந்தப் பகுதியில் சவூதி ராணுவம் சந்தித்துள்ள மிக அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு இது எனக் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.