முகப்பு
உலகம்

'தீபாவளி' தபால் தலை: இந்தியா, கனடா ஒருசேர வெளியிட முடிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா, கனடா அரசாங்கம் ஒருசேர தபால் தலை வெளியிடுகிறது.

Updated On : 30 ஆகஸ்ட், 2017 at 4:58 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:16 PM

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக தபால் தலை வெளியிட இந்தியா, கனடா அரசாங்கம் முடிவு செய்தது.

இதனையடுத்து, இரு நாடுகளின் தபால் துறைகளும் இவ்விவகாரம் தொடர்பாக கூட்டாக உடன்படிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், செப்டம்பர் 21-ந் தேதி இந்திய பண்டிகையான தீபாவளியை குறிக்கும் விதமாக இந்தியா, கனடா நாடுகள் இந்த தபால் தலையை கூட்டாக வெளியிடுகிறது.

Advertisement

கனடாவில் வாழும் இந்தியர்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையிலான கலாசாரத்தின் சின்னமாகவும் தீபாவளி பண்டிகை குறிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.