உலகம்

பேஸ்புக்கின் 'ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்லேஷனால்' சிறைக்குச் சென்ற பாலஸ்தீன இளைஞர்! 

IANS

ஜெருசலேம்: பேஸ்புக்கின் 'ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்லேஷன்' வசதி மூலம் மொழிமாற்றம் செய்யப்பட்ட பேஸ்புக் பதிவினைக் கொண்டு, பாலஸ்தீன இளைஞர் ஒருவரை இஸ்ரேல் போலீசாரை கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

இது குறித்து இஸ்ரேலின் மேற்கு கரை பகுதி போலீசாரின் செய்தித்தொடர்பாளரை மேற்கோள் காட்டி,  பாலஸ்தீனத்திலிருந்து வெளிவரும் ஹாரேட்ஸ் செய்தித் தாளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 

பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள பெய்தர் லிட் குடியிருப்பு பகுதியில் கட்டுமானத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 15-ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில், தன்னுடைய பணித்தளத்தில் உள்ள புல்டோசர் ஒன்றின் அருகில் நின்று கொண்டு, கையில் காபி மற்றும் சிகரெட்டுடன் சிரித்து கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தினை பதிவேற்றியிருந்தார்.அதில் அவர் உள்ளூரில் பேசப்படும் கொச்சையான அரபி மொழியில் 'உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்' என்னும் வாசகத்தினையும் பயன்படுத்தியிருந்தார்.    

பொதுவாக சந்தேகத்துக்குரியதாக கருதப்படும் பாலஸ்தீன இளைஞர்களின் பதிவுகளை இஸ்ரேல் போலீசார் கண்காணிப்பது வழக்கம். அதே போல அவரது இந்தப் பதிவினை கண்காணித்த இஸ்ரேலின் மேற்கு கரை பகுதி போலீசார் அவரைக் கைது செய்து விட்டனர்.

காரணம் என்ன என்றால், பொதுவாக இதற்கு முன்பாக சில சமயங்களில் இஸ்ரேலியர்கள் மீது புல்டோசரை பயன்படுத்தி தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படடுள்ளன. எனவே இந்த புகைப்படத்தினை பார்த்தவுடன் அவரது பதிவினை ஆராய்ந்துள்ளார்கள்.  ஆனால் விசாரித்த இஸ்ரேல் போலீசார் அரபி மொழி தெரியாதவர்கள் என்பதால் பதிவினை பேஸ்புக்கின் 'ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்லேஷன்' வசதி மூலம் மொழி மாற்றம் செய்துள்ளனர். அதில் 'அவர்களை தாக்கு' என்பதாக அவர்களுக்கு இஸ்ரேலிய மொழியாக்கம் கிடைத்துள்ளது. எனவே அந்த இளைஞர் மீது வன்முறையைத் தூண்டியதாக சந்தேகத்தின்பேரில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விட்டனர்

ஏன் என்றால் அந்த இளைஞர் பயன்படுத்திய கொச்சையான அரபி மொழியில் 'உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம்' என்பதற்கும் 'அவர்களை தாக்கு' என்பதற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம் என்பதுதான் காரணம். பின்னர் அந்த இளைஞரிடம் அரபி மொழி தெரிந்த போலீசார் மூலம் நடத்திய முறையான விசாரணையில் உண்மை தெரிய வந்தது. பின்னர் தங்கள் தவறை உணர்ந்த போலீசார் அவரை விடுதலை செய்து விட்டனர்.

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT