பீஜிங்: சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள அமெரிக்கத் தூதரத்தின் வெளியே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனத் தலைநகர் பீஜிங்கின் கெயாங் மாவட்டத்தில் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ளது. அங்கு பெரும்பாலான சீன மக்கள் வழக்கமாக அமெரிக்க விசா பெறுவதற்காக வரிசையாக நிற்கும் இடத்தின் அருகே, உள்ளூர் நேரப்படி வியாழன் மதியம் 1 மணி அளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் சிலருக்கு காயங்கள் உண்டாகியுள்ளதாக நேரடி சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
அந்த கட்டடத்தின் புகை மூட்டம் சூழ்ந்த பகுதியைக் காண்பிக்கும் புகைப்படங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
அதேசமயம் அந்த இடத்தில் தன் மேல் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்ற பெண் ஒருவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதாக சீனா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த பகுதியைச் சுற்றி போலீசார் பாதுகாப்பு வளையத்தை உண்டாக்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.