உலகம்

2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல்: அமெரிக்கா மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு 

2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசானது புற்றுநோய் சிகிச்சைமுறை குறித்த கண்டுபிடிப்புகளுக்காக,  அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஸ்டாக்ஹோம்:  2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசானது புற்றுநோய் சிகிச்சைமுறை குறித்த கண்டுபிடிப்புகளுக்காக,  அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் திங்கள் முதல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலாவதாக மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு சற்று முன்பு வெளியிடப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டியினர் இதனை வெளியிட்டனர். 

அதன்படி புற்றுநோய் சிகிச்சைமுறை குறித்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக அமெரிக்காவின் ஜேம்ஸ் அலிசன் மற்றும் ஜப்பானின் தஸுக்கு ஹோஞ்சோ ஆகிய இருவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுகிறது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்: உதவித்தொகை ரூ. 10,000-ல் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

10 லட்சம் பேருக்கு 0.11 விமான நிலையங்கள் மட்டுமே..! -பொருளாதார ஆய்வறிக்கை சொல்வதென்ன?

அஜீத் பவார் மனைவிக்கு துணை முதல்வர் பதவி?

துடரும் கூட்டணி! புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மோகன் லால்!

SCROLL FOR NEXT