முகப்பு
உலகம்

சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்: சீனா

2020 உய்கூர் இன மக்களின் மனித உரிமைக் கொள்கை தொடர்பான மசோதாவை அமெரிக்கா சட்டமாக்குவது

உலகம்

சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்: சீனா

2020 உய்கூர் இன மக்களின் மனித உரிமைக் கொள்கை தொடர்பான மசோதாவை அமெரிக்கா சட்டமாக்குவது

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

2020 உய்கூர் இன மக்களின் மனித உரிமைக் கொள்கை தொடர்பான மசோதாவை அமெரிக்கா சட்டமாக்குவது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகம் 18ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கடுஞ்சினத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.

சின்ஜியாங் தொடர்பான பிரச்சினைக்கும், மனித உரிமை, தேசிய இனம் மற்றும் மதத்துக்குமிடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை. அது பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிரிவினைவாதத்துடன் தொடர்புடையது. கடந்த 3 ஆண்டுகளில் சின்ஜியாங்கில் வன்முறை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. உள்ளூர் மக்கள் அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையைப் பொருட்படுத்தாமல் பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை வரையறையை மேற்கொண்டு வரும் அமெரிக்கா, இம்மசோதா மூலம் சீனாவின் இறையாண்மை, தேசிய இன உறவு, சின்ஜியாங்கின் செழுமை மற்றும் அமைதி ஆகியவற்றை சீர்க்குலைத்து சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கும் அதன் தீய நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா உடனடியாக தனது தவறைத் திருத்தி சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடில், சீனா உறுதியாக பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →