ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் 
உலகம்

தலிபான்களுடனான பேச்சுவார்த்தை தொடர வேண்டும்: ஜெர்மனி அதிபர்

தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் புதன்கிழமை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ANI

தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

பாதுகாப்புக் கருதி ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த பிற நாட்டு மக்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். மேலும், ஆப்கன் நாட்டு மக்களும் வாழ்வாதாரம் தேடி பிற நாடுகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே ஆப்கனை கைப்பற்றியுள்ள தலிபான்களின் அரசிற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்து நாடுகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கன் மக்களின் பாதுகாப்பிற்காக தலிபான்களுடன் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதன்முறையாக மௌனம் கலைத்த தவெக!

இந்த வார ஓடிடி படங்கள்!

சசிகுமாரின் மை லார்ட் படத்தின் 2 ஆவது பாடல்!

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

மியான்மரில் மருத்துவமனை மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்! 34 பேர் பலி

SCROLL FOR NEXT