உலகம்

பாகிஸ்தானில் கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு அக். 15 முதல் பொதுப்போக்குவரத்தில் அனுமதியில்லை

DIN

முழுமையாக கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு வருகிற அக்டோபர் 15 முதல் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 

கரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசி இயக்கத்தை முன்னெடுத்துள்ளன. மேலும் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சில முன்னுரிமைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில். வருகிற அக்டோபர் 15 முதல் முழுமையாக கரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 

மேலும், அக்டோபர் 15க்குப் பிறகு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். 

செப்டம்பர் 30க்குப் பிறகு விமானப் பயணத்திற்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 31 முதல் தடுப்பூசி போடாதவர்கள் ஷாப்பிங் மால்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் வருகிற செப்டம்பர் 29 வரை ஷாப்பிங் மால்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. 

செப்டம்பர் 30 க்குப் பிறகு முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே திருமண விழாக்களில் அனுமதி, ஹோட்டல்களில் அனுமதி, நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய ஒரு தவணையாவது தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT