உலகம்

‘ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்’: உலக சுகாதார நிறுவனம்

DIN

உருமாறிய புதிய வகை ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம்  தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உருமாறிய புதியவகை கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தொற்று பரவலைத் தடுக்க பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள கூடுதல் தகவல்கள் தேவை என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் தரவைச் சேகரித்து பகிர்ந்து கொள்வதில் உலக நாடுகள் பங்களிக்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதேசமயம் ஒமைக்ரான் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் விகிதத்தைக் கணக்கிடுவது கடினம் என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT