உலகம்

இங்கிலாந்து : கரோனாவால் 75 லட்சம் பேர் பாதிப்பு

DIN

இங்கிலாந்தில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இங்கிலாந்தில்  இதுவரை 75.05 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

நேற்று (செப்-20) நிலவரப்படி புதிதாக 22,533 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 75.05 லட்சமாக உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,35,553 ஆகவும் பதிவாகியிருக்கிறது.

மேலும் இங்கிலாந்தில் 9.16 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் 4.37 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டார்கள்  எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT