ஆப்கனைவிட்டு வெளியேறத் துடிக்கும் மக்கள்: விமானத்தில் தொங்கிச் சென்ற 3 பேர் பலி(விடியோ)
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விமானத்தில் தொங்கியபடி சென்ற இருவர் கீழே விழுந்து பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விமானத்தில் தொங்கியபடி சென்ற 3 பேர் கீழே விழுந்து பலியாகியுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் நேற்று தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.
இந்நிலையில், ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். மேலும், விமானங்கள் அனைத்திலும் முந்தியடித்து கொண்டு ஏறுவதால் நிலைமை கைமீறியதை அடுத்து, மக்கள் மீது இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | ஆப்கன் போர் முடிவுக்கு வந்தது: தலிபான்கள்
இதற்கிடையே, காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் இடம் கிடைக்காததால் வெளிபுறத்தை பலர் தொற்றிக் கொண்டனர். இருப்பினும், தொடர்ந்து விமானம் செலுத்தப்பட்டதால், வானில் பறக்கும்போது கீழே விழுந்து 2 பேர் பலியாகியுள்ளனர். இந்த காணொலி சமூக வளைதளங்களில் பரவி வருகின்றது.