முகப்பு
உலகம்

ஏமன்: ராணுவத் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் பலி

ஏமனில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

Updated On : 14 அக்டோபர் 2021, 12:19 pm IST
ஏமன்: ராணுவத் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் பலி
பகிர்:

ஏமனில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 108 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சவுதியுடன் கூட்டணி சேர்ந்து ஹவுதி அமைப்பினரின் மீது ஏமன் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட 19 ராணுவத் தாக்குதலில் ஹவுதியினர் 108 பேர் பலியாகியிருப்பதாக ஏமன் அரசு தெரிவித்திருக்கிறது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மாவட்ட எல்லைக்குள் நுழைவதைத் தடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என கூட்டுப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கடந்த அக்-12 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட 48 ராணுவத் தாக்குதலில் 134 ஹவுதிகள் உயிரிழந்திருக்கிறார்கள்.

கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக சவுதி அரசு ஏமன் அரசிற்கு உதவ ஆரம்பித்து 6 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.