உலகம்

உலகளவில் 950 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

DIN

உலகம் முழுவதும் 950 கோடி கரோனா தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க இதுவரை  கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 31.13 கோடியாக உயர்ந்திருக்கிற நிலையில் அதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தீவிரவமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 

மேலும், ஒமைக்ரான் அச்சுறுத்துதல் காரணமாக வேகமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக , ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் தொற்றால் அண்டை நாடுகள் தடுப்பூசிகளை தொடர்ந்து செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ,காலை நிலவரப்படி உலகம்  முழுவதும் 950 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாவும் அதில் 392 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்கள் என்றும் தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

தற்போது உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 6.01 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 8.45 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.58 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.8 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

மேலும், உலகம் முழுவதும் 51 சதவீத மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT