உலகம்

நேபாளத்தில் அதிகரிக்கும் கரோனா தொற்று: புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

DIN

நேபாளத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நேபாளம் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தவண்ணம் உள்ளது. அதனைத் தொடர்ந்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு புதியக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி பொதுஇடங்களில் மக்கள் கரோனா தடுப்பூசி சான்றிதழ்களை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தலைநகர் காத்மாண்டுவில் தொற்று பரவல் சூழல் காரணமாக பள்ளிகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வழிபாட்டுத் தலங்களில் விழாக்களை நடத்தவும், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு 3 நாள்களுக்கு ஒருமுறை கரோனா தொற்று பரிசோதனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேபாளத்தில் இதுவரை 41 சதவிகித மக்கள் இரண்டு தவணை கரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT