உலகம்

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா, பள்ளிகள் மூடல்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் சீனாவின் குவாங்ஷூவில் உள்ள மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் சீனாவின் குவாங்ஷூவில் உள்ள மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவின் குவாங்ஷூ மாகாணம் 18 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. கடந்த சில தினங்களாக இந்த மாகாணத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இதனையடுத்து, மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளார்கள். அதேபோல சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நகரம் ஒன்றில் கரோனா பரவலின் எதிரொலியாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் சீனா முழுவதிலும் 11,773 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 10,351 பேருக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சீனாவின் மக்கள் தொகையை வைத்துப் பார்க்கும்போது நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இருப்பினும், நாட்டில் கரோனா பாதிப்பை பூஜ்ஜியமாக மாற்ற முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென கரோனா பரவல் அதிகரித்து வருவது அரசினை கலக்கமடையச் செய்துள்ளது.

சீனாவில்  மீண்டும் கரோனா பரவத் தொடங்கியிருப்பதால் அரசு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

குண்டா் தடுப்புக் காவலில் இளைஞா் கைது

விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

மொபெட் மீது காா் மோதல்: முதியவா் மரணம்

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

SCROLL FOR NEXT