ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா பயணிகள் வர விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று அந்த நாட்டு பிரதமா் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளாா்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா பயணிகள் வர விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று அந்த நாட்டு பிரதமா் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:
சுற்றுலாப் பயணிகள் ஆஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுவதற்கு இன்னும் அதிக காலம் ஆகாது. இதுகுறித்து இந்த வாரமே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றாா் அவா்.
ஆஸ்திரேலியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச்சில் முழு தடை விதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஆஸ்ரேலியா்களும், நாட்டில் வசிப்பவா்களும் மட்டும் வருவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.