உலகம்

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9,500 ஆக உயர்வு!

DIN

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 9,500- யைக் கடந்துள்ளது.

கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியும், அண்டை நாடான சிரியாவும் குலுங்கின. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் சில நிமிடங்களில் குடியிருப்புகள் உள்பட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின.

திங்கள்கிழமை இரவு வரை இரு நாடுகளிலும் சோ்த்து 2,600 போ் பலியானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 9,500 ஆக அதிகரித்துள்ளது.

நிலநடுக்கத்தை தொடா்ந்து 200 முறை அதிா்வுகள் உணரப்பட்டதாலும், கடும் குளிராலும் மீட்புப் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீட்புக்குழுக்களை அனுப்பியுள்ளன. 

இடிபாடுகளில் இன்னும் ஆயிரக்கணக்கானோா் சிக்கியுள்ளதாகவும் இதனால் பலி மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மீட்புப்பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. 

துருக்கி, சிரியா நிலநடுக்கம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT