உலகம்

ஆப்கனில் வெள்ளம்: 4 பேர் பலி, 25 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். 

DIN

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். 

மாகாணத்தில் வெள்ளிக்கிழமை மாலை கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூன்று குழந்தைகள் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது. 

இந்த பேரழிகரமான வெள்ளத்தில் சிக்கி இதுவரை 300 வீடுகள் வரை அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் அழிந்துள்ளது. இதற்கிடையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் வடக்கு பால்க், சமங்கன், தகார், குண்டூஸ் மற்றும் பாக்லான் மாகாணங்களில் உள்ள தோட்டங்கள் மற்றும் பழ மரங்கள் சேதமடைந்தன.

வரும் நாள்களில் நாட்டின் 34 மாகாணங்களில் 18 மாகாணங்களில் அதிக மழை மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடும் என ஆப்கானிஸ்தானின் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துயிலில் சந்திப்போம்... ஆர்த்தி சிகரா

கள்ளமில்லாத சிரிப்பு... பூமி பெட்னகர்

சிற்றின்பம்... சாஹிபா பாலி!

தந்தைக்கு சிறுநீரகம் கொடுத்தது தவறா? லாலு பிரசாத் மகள் ரோஹிணி உருக்கம்

இந்த வாரம் கலாரசிகன் - 16-11-2025

SCROLL FOR NEXT