ஜப்பானில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், 'கடந்த ஜனவரி 1 ஆம் நாள் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அறிந்தபின் மிகுந்த வருத்தமடைகிறேன். ஜப்பானுடனான உறவை இந்தியா மிகவும் மதிக்கிறது.
ஜப்பானுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்' என எழுதியிருக்கிறார்.
இதையும் படிக்க: மக்களவைத் தேர்தல்: ஜெ.பி. நட்டா நாளை ஆலோசனை
மேலும், 'ஜப்பானுக்கும் ஜப்பான் மக்களுக்கும் துணையாக நிற்கிறோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்' எனக் கூறியுள்ளார்.
7.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள் அனைத்தும் மோசமாக சேதமாகியிருப்பதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை: நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு
ஜப்பானின் வடக்கு பெனின்சுலா பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மிகவும் சேதமடைந்திருப்பதால் அங்கு மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரபல சுற்றுலா தளமான அசைச்சி தெருவில் கடைகள், வீடுகள் உள்பட 200 கட்டிடங்கள் நெருப்புக்கு இரையாகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.