குவைத் தீவிபத்து: சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!
குவைத் தீவிபத்தில் காயமுற்ற தொழிலாளர்களுக்கு தூதரகம் முழு உதவி: வெளியுறவுத்துறை அமைச்சகம்
உலகம்குவைத் தீவிபத்து: சிகிச்சையில் உள்ள இந்தியர்களை சந்தித்த தூதரக அதிகாரி!
குவைத் தீவிபத்தில் காயமுற்ற தொழிலாளர்களுக்கு தூதரகம் முழு உதவி: வெளியுறவுத்துறை அமைச்சகம்
குவைத் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்களுக்கு வேண்டிய உதவிகளை தூதரகம் மேற்கொள்ளும் என அதன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிபத்தில் காயமுற்று அல்-அடான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தூதரக அதிகாரி ஆதர்ஷ் ஸ்வைகா சென்று சந்தித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். 40 பேர் இறந்துள்ளதாகவும் 50-க்கும் மேலான நபர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன” எனத் தெரிவித்த அவர், இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான முழு உதவிகளையும் தூதரகம் செய்துதரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.