FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்! -கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி

அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் -புதிய பிரதமராகும் மார்க் கார்னி

Updated On : 10 மார்ச் 2025, 4:52 pm IST
மார்க் கார்னி - @MarkJCarney
பகிர்:

கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மார்க் கார்னி(59) அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று பேசியுள்ளார்.

கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரே லிபரல் கட்சியின் தற்போதைய தலைவராகவும் பதவி வகிக்கும் சுழலில், லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றிபெற்றுள்ளார்.

இதையடுத்து, கனடாவின் 24-வது பிரதமராகவும் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் கார்னி விரைவில் பதவியேற்கவிருக்கிறார்.

Advertisement

Advertisement

கனடா நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்ததொரு தலைவராக அறியப்படும் மார்க் கார்னி பேசியிருப்பதாவது:

அமெரிக்கா தரப்பு கனடாவுக்கு உரிய மரியாதையை அளிக்கும் வரையில் அவர்களது நடவடிக்கைகளைப் பின்பற்றி, அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், இருநாட்டு வர்த்தகத்தில் அமெரிக்கா எந்தவொரு தவறையும் இழைக்கக்கூடாது என்றும் பகிரங்கமாக எச்சரித்துமிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments