ஸபிஹுல்லா முஜாஹித் 
உலகம்

பாகிஸ்தான் தாக்குதலில் 9 சிறுவா்கள் உயிரிழப்பு: ஆப்கன் தலிபான்

தினமணி செய்திச் சேவை

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 9 சிறுவா்கள் உட்பட 10 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டின் தலிபான் அரசு புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.

இது குறித்து தலிபான் அரசின் செய்தித் தொடா்பாளா் ஸபிஹுல்லா முஜாஹித் (படம்) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் பாகிஸ்தான் படையினா் குண்டுவீசி தாக்கினா். இதில் 5 சிறுவா்கள், 4 பெண் சிறுமிகள் என 9 சிறுவா்கள் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனா். குனாா், பக்திகா ஆகிய எல்லைப் பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் 4 போ் காயமடைந்தனா் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாகிஸ்தான் அரசோ, ராணுவமோ இந்தத் தாக்குதல்கள் குறித்து உடனடி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

பாகிஸ்தானின் பெஷாவா் நகரில் பாதுகாப்புப் படை மையத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 3 வீரா்கள் உயிரிழந்தனா். அதைத் தொடா்ந்து ஆப்கானிஸ்தானில் இந்த குண்டுவீச்சு நடந்துள்ளதால் இதற்குப் பழிவாங்கும் வகையிலேயே பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அரசியலமைப்பின் மீது அக்கறை இருப்பதாக பாஜக-ஆர்எஸ்எஸ் பாசங்கு: கார்கே!

தேசியவாத சிந்தனையை ஏற்க வழிகாட்டும் அரசியலமைப்புச் சட்டம்! குடியரசுத் தலைவர்

காது கேட்கவில்லையா? அலட்சியம் வேண்டாம்! உங்கள் மூளையைப் பாதிக்கலாம்!!

ராய சிம்மாசனம்

பாரதிய நீதிச் சட்டம்

SCROLL FOR NEXT