நீண்டநாள் காதலியைக் கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய பிரதமர்!
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது குறித்து...
ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அவரது நீண்டநாள் காதலி ஜோடி ஹெயிடனை திருமணம் செய்துகொண்டார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கும், அவரது நீண்டநாள் காதலி ஜோடி ஹெயிடனுக்கும் இன்று (நவ. 29) கான்பெரா நகரில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதன்மூலம், பதவியேற்ற பிறகு திருமணம் செய்துகொண்ட முதல் ஆஸ்திரேலிய பிரதமர் எனும் பெருமையை அவர் அடைந்துள்ளார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடந்து, பிரதமர் அல்பானீஸ் - ஹெயிடன் தம்பதிக்கு ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, பிரதமர் அந்தோனி அல்பானீஸுக்கும், அந்நாட்டின் முன்னாள் அரசியல் தலைவர் கார்மல் டெபட் என்பவருக்கும் திருமணமாகி, கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பிரதமர் அல்பானீஸும், ஹெயிடனும் காதலித்து வந்த நிலையில், முக்கிய அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பிரசாரங்களில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உலகின் விலைமதிப்புமிக்க நிசார் செயற்கைக்கோள்! புகைப்படங்களை அனுப்பத் தொடங்கியது!
Australian Prime Minister Anthony Albanese has married his longtime girlfriend Jodie Hayden.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.