உலகப் போருக்காக மன்னிப்பு கோரிய ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்!
ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முராயமா காலமானார்...
ஜப்பானின் முன்னாள் பிரதமர் டோமிச்சி முராயமா, தனது 101 ஆவது வயதில் இன்று (அக். 17) காலமானார்.
ஜப்பான் அரசுக்கு, கடந்த 1994 முதல் 1996 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பதவி வகித்த டோமிச்சி முராயமா, வயது மூப்பினால் அவரது சொந்த ஊரான ஒயிடா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் முராயமா இன்று மரணமடைந்ததாக, ஜப்பானின் சோசியல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவர் மிசுக்கோ ஃபுக்குஷிமா தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் நடத்திய தாக்குதல்களுக்கு கடந்த 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, பிரதமார் முராயமா முதல்முறை அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரினார். அதையடுத்து, அவருக்குப் பின் பதவி வகித்த ஜப்பானின் பிரதமர்கள் அந்த வழக்கத்தைப் பின்பற்றி வந்தனர்.
ஆனால், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜப்பானின் தேசியவாதத் தலைவரும், அப்போதைய பிரதமருமான ஷின்சோ அபே, மன்னிப்பு கேட்கும் வழக்கத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மோடியின் அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை! டிரம்ப்
Former Japanese Prime Minister Tomichi Murayama passed away yesterday (Oct. 16) at the age of 101.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.