FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

நிலவில் மோதிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்! பூமிக்கு ஆபத்தா?

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்டின் மேற்பகுதி, நிலவின் மேற்பரப்பில் மோதியது குறித்து...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:25 pm IST
ஃபால்கன் 9 ராக்கெட் (கோப்புப் படம்) - X | SpaceX
பகிர்:

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்டின் மேற்பகுதி, நிலவின் மேற்பரப்பில் மோதியது.

2025 ஜனவரி 15-ல் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட், இரு நிலவுக் கலன்களை விண்வெளிக்கு ஏந்திச் சென்றது.

இந்த இரு நிலவுக் கலன்களை விண்வெளியில் இறக்கிவிட்டு, ஃபால்கன் 9 ராக்கெட் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஃபால்கன் 9 ராக்கெட் பூமிக்கு திரும்பாமல், விண்வெளியின் சுற்றுப்பாதையில் சிக்கிக் கொண்டது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்ட ஃபால்கன் 9 ராக்கெட்டின் எரிபொருள் தீர்ந்துபோனதால், கட்டுப்பாட்டை இழந்து நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சிக்கி, நிலவை நோக்கி, புதன்கிழமை (ஆக. 5) மதியம் 1.05 மணியளவில் 5,400 மைல் வேகத்தில் (மணிக்கு 8,690 கி.மீ.) நிலவின் மேற்பரப்பில் மோதியது.

நிலவின் வட அரைக்கோளத்தில் உள்ள ஐன்ஸ்டீன் பள்ளத்துக்கு அருகில் 4 டன் எடைகொண்ட ஃபால்கன் 9 ராக்கெட் மோதியதில், நிலவின் மேற்பரப்பில் சுமார் 60 - 90 அடி அகலமும், 12 - 16 அடி ஆழமும் கொண்ட புதிய பள்ளம் உருவாகும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், நிலவில் இந்த ராக்கெட் மோதியதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என நாசா தெரிவித்துள்ளது.

ராக்கெட் மோதியதால், நிலவில் ஏற்பட்டுள்ள அதிர்வலைகளை நாசாவின் விண்கலங்கள் ஆய்வு செய்யவுள்ளன.

summary

SpaceX Falcon 9 Rocket Crashes On Moon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments