சிரியா மீது தாக்குதல்! அல்-காய்தா அமைப்பின் முக்கிய தலைவர் பலி: அமெரிக்கா
சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு
சிரியா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில், சிரியாவின் பால்மைரா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் மற்றும் மொழிப் பெயர்ப்பாளர் ஒருவர் என மூவர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, பயங்கரவாதிகளின் இருப்பிடங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடியாக தொடர்புகொண்ட அல்-காய்தாவின் முக்கிய தலைவர் எனக் கூறப்படும் பிலால் ஹசன் அல்-ஜாசிம் கொல்லப்பட்டதாக அமெரிக்கப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
கொல்லப்பட்ட பிலால் ஹசன், பால்மைரா தாக்குதலில் தொடர்புடையவர் என்றும் அமெரிக்கா கூறுகிறது.
US kill Al-Qaeda affiliate leader responsible for ISIS attack that killed 3 Americans
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.