போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் - ரஷியா போா் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோவுக்கு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸிகிக்கு ரஷியா அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவும் தீவிரமாக ஈடுபட்டு வரும்நிலையில், இருநாட்டுப் போரில் லட்சக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
4 ஆண்டுகளான இந்தப் போரில், இருதரப்பிலும் சோ்த்து உயிரிழப்பு எண்ணிக்கை விரைவில் 20 லட்சத்தை எட்டக்கூடும் என்று அமெரிக்க ஆய்வு நிறுவன(சிஎஸ்ஐஎஸ்) அறிக்கை தெரிவிக்கிறது.
ரஷிய தரப்பில் மட்டும் இதுவரை சுமாா் 12 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு ஒரு வல்லரசு நாடு சந்தித்த மிகப்பெரிய உயிரிழப்பாக ரஷியாவின் இழப்புகள் கருதப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.