FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!

அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற்ற ஜனநாயகக் கட்சியைப் பற்றி...

அமெரிக்க நாடாளுமன்றம்.
பகிர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமெரிக்க செனட் சபை தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (மேலவை), பிரதிநிதிகள் சபை (கீழவை) என இரு அவைகளைக் கொண்டது. இதில் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால், தோராயமாக மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.

435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும், அதேநேரத்தில் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, நவ. 3 மாலை நடைபெற்றது. தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதிபர் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

Advertisement

Advertisement

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 218 இடங்களிலும், குடியரசுக் கட்சி 113 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது.

செனட் சபையில் பெரும்பான்மைக்கு 50 இடங்கள் தேவை என்ற நிலையில், ஜனநாயகக் கட்சி 52 இடங்களையும் குடியரசுக் கட்சி 40 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இன்னும் 10 இடங்களுக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜனநாயகக் கட்சி ஏற்கனெவே பெரும்பான்மையை பெற்றுவிட்டது.

செனட் சபைக்கான 35 இடங்களில் 18 இடங்களில் ஜனநாயகக் கட்சியும் 9 இடங்கள் குடியரசுக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. 8 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஆளும் குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட கான்சஸ், டெக்சாஸ் மற்றும் தென் கரோலினா ஆகிய மாகாணங்கள் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.

கான்சஸில் ரோஜர் மார்ஷலைத் தோற்கடித்து, பாஸ்டர் ஆடம் ஹாமில்டன் ஜனநாயகக் கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திடாத வெற்றியைப் பெற்றுத் தந்தார். இது 94 ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி. 

summary

Democrats lead in several Republican states, including in Ohio, Iowa and Texas. They need a gain of three seats to take the Congress after delivering the first flip in North Carolina with a massive win. A loss would threaten President Donald Trump's powers in the last two years of his presidency, though the process would not be that easy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.