தேர்தல் முடிவுகள்! போருக்கு எதிரான அமெரிக்கர்களின் பிரதிபலிப்பு! - ஈரான் கருத்து
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது குறித்து ஈரான் கருத்து...
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது போருக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையின் பிரதிபலிப்பு என ஈரான் அரசு கூறியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் 435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, கடந்த நவ. 3 மாலை நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவ. 4) காலை முதல் எண்ணப்பட்டு வந்த நிலையில், அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்ததுடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. இதையடுத்து, ஜனநாயகக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மனசாட்சி அல்லது விலைவாசி உயர்வு ஆகியவற்றால் போருக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையை இந்தத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன என ஈரானின் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“மனசாட்சியோ அல்லது விலைவாசி உயர்வோ, அமெரிக்கர்கள் போர் வேண்டாம் எனக் கூறியிருப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்.
அமெரிக்க அரசு, சர்வதேச அளவில் பணம் கொடுப்பவர்களுக்கும் மிரட்டிப் பணம் பறிப்பவர்களுக்கும், சேவை செய்ய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டால், வேண்டாம் எனும் பதிலே அவர்களுக்குக் கிடைக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.