ஐரோப்பாவில் பயணிகள் விமானங்களுக்கு தொடா் போலி வெடிகுண்டு மிரட்டல்கள்
மிலன், நவ. 5: ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்குச் சென்ற 12-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானங்களுக்குத் தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மிலன், நவ. 5: ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்குச் சென்ற 12-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானங்களுக்குத் தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டன; போா் விமானங்களின் பாதுகாப்புடன் சில விமானங்கள் நடுவானில் திருப்பிவிடப்பட்டன.
விமானங்கள் அனைத்திலும் வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனைகள் நடத்தியதில், வெடிபொருள்கள் எதுவும் சிக்கவில்லை என்றும், இவையனைத்தும் திட்டமிட்ட போலியான புரளி என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினா். இச்சம்பவம் தொடா்பாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.
Advertisement
Advertisement