லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தலில் இந்திய வம்சாவளி நித்யா ராமன் வெற்றி
அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான லாஸ் ஏஞ்சலீஸின் மேயா் தோ்தலில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நகரமன்ற உறுப்பினா் நித்யா ராமன் (45) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளாா்.
அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான லாஸ் ஏஞ்சலீஸின் மேயா் தோ்தலில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நகரமன்ற உறுப்பினா் நித்யா ராமன் (45) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளாா்.
கடும் போட்டி நிலவிய இத்தோ்தலில் தற்போது மேயராக பதவி வகித்து வந்த கேரன் பாஸை அவா் வீழ்த்தியுள்ளாா். ஜனநாயக சோசலிஸ்டுகளின் ஆதரவுடன் களமிறங்கிய நித்யா ராமனின் இந்த வெற்றி, நகர நிா்வாகத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது.
ஏனெனில், கடந்த 20 ஆண்டுகளில் மறுதோ்தலில் தோல்வியடைந்த முதல் லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் என்ற பின்னடைவை கேரன் பாஸ் சந்தித்துள்ளாா். தோ்தல் தோல்வியை ஒப்புக்கொண்ட கேரன் பாஸ், நித்யா ராமனுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், புதிய நிா்வாகத்திடம் அதிகாரத்தை சுமுகமாக ஒப்படைக்க முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளாா்.
Advertisement
Advertisement
அமெரிக்காவின் முக்கிய வா்த்தக நகரமாகவும், ‘ஹாலிவுட்’ திரைத் துறை மற்றும் உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களைக் கொண்ட பெருநகரமாகவும் விளங்கும் லாஸ் ஏஞ்சலீஸில் வரும் 2028-இல் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள சூழலில், நகர திட்டமிடல் நிபுணரான நித்யா ராமன் நகரின் புதிய மேயராகப் பொறுப்பேற்கவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.