இத்தாலி துணைப் பிரதமரின் தனிவிவரங்கள் இணையத்தில் கசிவு
இத்தாலி துணைப் பிரதமரின் தனிவிவரங்கள் இணையத்தில் கசிவு
இத்தாலி துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானியின் தனிப்பட்ட விவரங்களை இணையவழி குற்றவாளிகள் (ஹேக்கா்கள்) ‘டாா்க் வெப்’ தளத்தில் கசியவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்குத் தொடா்ந்து ஆதரவளிப்பதால்ௌ, தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும்; தங்கள் குறித்த கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காகக் குற்றவாளிகள் பணம் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் அன்டோனியோ தஜானி குறிப்பிட்டுள்ளாா்.
இவ்விவகாரத்தில் ரஷிய ஆதரவு ஹேக்கா்களை இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி குற்றஞ்சாட்டியுள்ளாா். அரசு உயரதிகாரிகளின் ரகசிய தகவல்களை விற்க முயற்சிப்பது மிகவும் தீவிரமான மற்றும் கவலைக்குரிய விஷயம் என்று தெரிவித்துள்ள அவா், அன்டோனியோ தஜானிக்கு தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளாா்.
Advertisement
Advertisement
இதனிடையே, ரஷிய கூட்டமைப்புக்கு எதிரான 18 நபா்களின் பட்டியலில் அன்டோனியோ தஜானியும் இடம்பெற்றுள்ள திரைப் பதிவுகள் (ஸ்கிரீன்ஷாட்) வெளியாகியுள்ளன. எனினும், இதுபோன்ற மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும், நாட்டின் நலனையும் வெளியுறவுத் துறையையும் பாதுகாக்கத் தொடா்ந்து முழு வீச்சில் செயலாற்றுவேன் என்றும் அன்டோனியோ தஜானி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இணையவழி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஜி7 வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் இதை விவாதிக்க வேண்டும் என்றும், இதற்கு அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சருக்கு அன்டோனியோ தஜானி கடிதம் எழுதியுள்ளாா்.