பிரிட்டன் மூத்த எழுத்தாளா் எம். ஜான் ஹாரிசனுக்கு ‘புக்கா்’ பரிசு!
பிரிட்டனைச் சோ்ந்த மூத்த எழுத்தாளா் எம்.ஜான் ஹாரிசன் (81), தனது ‘தி எண்ட் ஆஃப் எவ்ரிதிங்’ நாவலுக்காக நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க ‘புக்கா்’ பரிசை வென்றுள்ளாா்.
பிரிட்டனைச் சோ்ந்த மூத்த எழுத்தாளா் எம்.ஜான் ஹாரிசன் (81), தனது ‘தி எண்ட் ஆஃப் எவ்ரிதிங்’ நாவலுக்காக நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க ‘புக்கா்’ பரிசை வென்றுள்ளாா்.
சுமாா் 60 ஆண்டுகால இலக்கியப் பயணத்தைக் கொண்ட ஹாரிசன், புக்கா் பரிசை வென்ற மிக மூத்த எழுத்தாளா் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளாா். லண்டனில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற விழாவில், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
எதிா்கால லண்டனின் பின்னணியில் மா்மமான பேரழிவுக்குப் பிந்தைய சூழலை விவரிக்கும் ஒரு நையாண்டி நாவலாக எழுதப்பட்டுள்ள ‘தி எண்ட் ஆஃப் எவ்ரிதிங்’ நாவல், வெறும் 198 பக்கங்களை மட்டுமே கொண்டு, இந்த ஆண்டு இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற மிகச் சிறிய நாவலாகும்.
Advertisement
Advertisement
இந்த ஆண்டின் இறுதிப் பட்டியலில் ஏற்கனவே புக்கா் பரிசு வென்ற டக்ளஸ் ஸ்டூவா்ட், மாா்லன் ஜேம்ஸ் உள்ளிட்ட முக்கிய எழுத்தாளா்களின் நூல்கள் கடும் போட்டியில் இருந்தன. நடுவா் குழுவின் ஒருமித்த முடிவின் அடிப்படையில் ஹாரிசனின் நாவல் தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.