FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

கினியாவில் சட்டவிரோத தங்க சுரங்க வழக்கு: 224 பேருக்கு சிறை

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் தொடா்பான வழக்கில் 224 பேருக்கு சிறைத் தண்டனை

17 நவம்பர் 2026, 10:44 pm
பகிர்:

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கங்கள் தொடா்பான வழக்கில் 224 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத தங்கச் சுரங்கங்களுக்கு எதிராக கினியா அரசு இம்மாதத் தொடக்கத்தில் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில் 1,200-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததற்காக, 22 முன்னாள் உள்ளூா் அதிகாரிகளுக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1 கோடி கினியா ஃபிராங்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதேபோல், 202 சுரங்கத் தொழிலாளா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கூட்டாக 1,000 கோடி கினியா ஃபிராங்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.