ரஷிய ராணுவ விமானம் விபத்து - 19 போ் உயிரிழப்பு
ரஷியாவின் மேற்கு சைபீரியா பகுதியில் ராணுவ சரக்கு விமானம் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 19 பேரும் உயிரிழந்தனா்.
ரஷியாவின் மேற்கு சைபீரியா பகுதியில் ராணுவ சரக்கு விமானம் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 19 பேரும் உயிரிழந்தனா்.
தலைநகா் மாஸ்கோவுக்கு கிழக்கே சுமாா் 3,000 கி.மீ. தொலைவில் உள்ள கெமெரோவோ பிராந்தியத்தில் மக்கள் நடமாட்டமில்லாத பகுதியில், அந்த ‘ஏஎன்-12’ ரக விமானம் விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்பக் கோளாறே இவ்விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், விமானப் படை நிபுணா்கள் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.
சோவியத் யூனியன் காலத்தில் 1950-களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட 4 என்ஜின்கள் கொண்ட ‘ஏஎன்-12’ ரக விமானங்கள், ரஷியா மற்றும் பிற நாடுகளில் இன்றும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
Advertisement
Advertisement